கோவில் திருவிழாவும் கும்ப நீராட்டும்
நாகர்கோவிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுசீந்திரம் என்ற ஊர் அங்ள்ள தாணுமாலையன் கோவிலால் புகழ் பெற்று விளங்குகிறது. அங்கு ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவிற்கு நான் குடும்பத்தாருடன் செல்வது வழக்கம். இதுதான் சிறு வயதில் எனது வெளியூர் அனுபவமாக இருந்தது. அப்பாவோடும், அக்காவோடும் சில ஆண்டு அம்மாவோடும் நாகர்கோவில் பேருந்து நிலயத்திலிருந்து புறப்படுவோம். திருவிழா என்பதால் பேருந்து மூன்று கிலோமீட்டரையும் கடக்க அரை மணி நேரத்துக்கு மேலாகும். கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்வது எனக்கு பிடித்த ஒன்று. ஜன்னலோர இருக்கையை பிடிப்பதற்காக அப்பாவிடமும் அக்காவிடமும் திட்டு வாங்குவேன். நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.
மிகப்பெரிய கோபுரம் உடையது சுசீந்திரம் கோவில். அதன் முன் ஒரு அழகிய தெப்பக்குளம் உண்டு. திருவிழாவன்று அவ்வூரில் கரும்பு விற்பனை படுஜோராக நடக்கும். கோவிலின் உள்பிரகாரத்தில் மூன்று ஆள் உயரத்தில் ஒரு ஆஞ்சனேயர் சிலை உண்டு. அதற்கு தலை முதல் கால் வரை வடை மாலை செய்து போட்டிருப்பார்கள். பார்க்க வியப்பாக இருக்கும். கோபுரம் என்னவோ பெரியது. ஆனால் கோவில் சிறியதுதான். கோவில் பிரகாரத்திலுள்ள தூண்களில் காதை வைத்து தூணை தட்டினால் ஒன்பது சுரங்கள் கேட்கும். முதலில் பலர் சொன்னபோதும் நான் நம்ப வில்லை. நானே அவ்வாறு செய்து பார்த்த பிறகுதான் நம்பினேன். தூணில் காதை பதித்து தூணைத் தட்ட அருமையான இசையொலி எழும்பி காதையும் மனதையும் நிரப்பும்.
நாங்கள் மாலையில் செல்வதால் தேரோட்டம் பெரும்பாலும் முடிந்திருக்கும். வெளிச்சப்பூக்கள் விதவிதமான விளக்குகளில் முளைத்திருக்கும். திரும்பி வருகையில் ஆளுக்கு நாலைந்து கரும்புகளை வாங்கிச்சுமந்தபடி வீடு திரும்புவோம். அப்படி திரும்பி வரும்போது ஒருமுறை பேருந்தின் ஜன்னல் வழியே வானத்தை வேடிக்கை பார்த்தபடியே இருந்தேன். அப்போதுதான் அந்த கேள்வி என் மனதில் முளைத்தது. வானில் மேகங்கள் பலவடிவங்களில் சிந்திப் பரவிச் செல்வதைக் கவனித்தேன். அதற்கும் மேலே…மேலே…கதிரவனுக்கும் மேலே என்ன இருக்கிறது என்று நினத்தேன். நம்மை படைத்தது கடவுள். கடவுளைப் படைத்தது யார் என்று நினைத்தேன். கடவுளுக்கு கடவுள் யார் என்ற கேள்வி என் மனதைக் குடைந்தது. ஆனல் விடை கிடைக்கவில்லை. நெருக்கடி மிக்க நகரப்பகுதியில் பேருந்து நுழைந்தவுடன் என் நினைவுகள் மாறின.
பின் நான் கல்லூரியில் படித்தபோது ஒருமுறை அந்தக் கோவிலில் புத்தக்க வேலை முடிந்து கும்ப நீராட்டு நடந்த விழாவிற்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அந்த உயரமான கோபுரத்தில் அன்று கும்ப நீராட்டு நடத்தி வைத்தவர் வேறு யாருமல்ல. இன்று கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சிமட சின்ன சங்கராச்சாரியேதான்.





siru thurumbum pal kutha udavum athu pola oru chinna matera newsa miga alaga soltinga asathitinga.
நன்றி. உங்கள் மறுமொழிதான் முதலாவது.
thankal e-mail address ketaikkuma
enathu email: yah.me2u@yahoo.com