சங்கல்பம்

தமிழ் மண்ணிலிருந்து இந்தியையும் இந்தியன்களின் ஆதிக்கத்தையும் ஒழிப்போம்.

எம் தமிழர் அரசியல்

மது ஒழிப்பு போராட்டம் பா.ம.க. கட்சி நடத்தியது

ஒக்கேனக்கல் போராட்ங்கள் – மீண்டும் ஒரு பாடம்

ஒக்கேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றப் போவதாக தமிழக அரசு அறிவித்தாலும் அறிவித்தது…காத்திருந்த கன்னட அமைப்புகள் தங்கள் கண்டனப் போராட்டங்களை வன்முறை வழியில் நடத்த துவங்கி விட்டன. கர்னாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிட தடை ஏற்படுத்தியதிலிருந்து தமிழகப் பேருந்துகளை நொறுக்குவது வரை அரங்கேற்றினார்கள். பதிலுக்கு தமிழக மண்ணின் மைந்தர்களும் எச்சரிக்கைகளை, போராட்டங்களை அடுக்கி வைத்து அவிழ்த்து விடத்தொடங்கி விட்டார்கள். இந்தப் போராட்டங்களையும் அதனையொட்டி வெளியான போராட்டத் தலைவர்களின் அறிக்கைகளையும் பார்க்கும் போது இவை மஹாராஷ்ட்ராவின் ராஜ்தாக்கரேயின் நிலைப்பாட்டுக்கு சற்றும் [...]

மலேசியத் தேர்தல் முடிவுகள்

அண்மையில் நடைபெற்ற மலேசியத் தேர்தலின் முடிவுகள் அந்நாட்டு வேதிக் கலவையின் வேறு பாடுகளை உலகிற்கு வெளிக்காட்டி விட்டது. இத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்தமாக தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப் பட்டதன் தாக்கத்தை உள்வாங்கியிருக்கிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 140-ஐ மட்டுமே ஆளுங்கட்சி பெற்று குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அத்துடன் டத்தோ சாமிவேலுவின் கட்சி பின் தள்ளப் பட்டு படு தோல்வியை சந்தித்திருக்கிறது. மலேசியத் தமிழர்கள் நடத்திய போரட்டங்களுக்கு அவர் ஆதரவு தராததே அவர் தோல்விக்கு காரணமாக [...]

வதந்தியும் உண்மையும்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றிய வதந்தி முதன்முதலாக 1987-ல் வெளியானது. இந்திய அமைதிப் படையினர் சுட்டதில் அவர் காலில் குண்டடி பட்டு நொண்டி நொண்டி நடந்து சென்றதாக அப்போது தினமலர் செய்தி வெளியிட்டு அமர்களப் படுத்தியது. வெகு விரைவிலேயே அவ்வாறு செய்தி வெளியான தினமலர் இதழை கையில் வைத்துக் கொண்டு பிரபாகரன் படிப்பதைப் போன்ற புகைபடத்துடன் அவர் நலமாக உள்ளார் என்று எல்லா செய்தித் தாள்களிலும் செய்தி வெளியானது. இரண்டாவது முறையாக 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் [...]

சித்ம்பரம் நிகழ்வு

இம்மாதம் துவக்கத்தில் சிதம்பரம் நடராசர் கோவிலில் நடந்த வன்முறை எப்படி ஒரு அதிகார முறை அழுகி நாற்றமெடுத்து அழியும் நிலையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயலும் என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் நிலை கொண்ட பார்பன அதிகார வர்க்கம் இம்மண்ணின் மக்களை கோவில் கருவறைக்குள் நுழையவிடாமலு, தொல்குடி மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமலும் தடுத்து இழிவு படுத்தி வைத்திருக்கிறது என்பது வறாலாறு. இந்த வறலாற்றை தொடர்ந்து எடுத்துச் செல்ல சமத்கிருதம் என்னும் கருவியையும் பயன்படுத்தி வருகிறது பார்ப்பன வர்க்கம். நவீன [...]

Follow

Get every new post delivered to your Inbox.