தோட்டம்

தோட்டம் – தமிழ் வலைப்பூக்களின் தோட்டமாக திறக்கிறது. இந்த பக்கத்தில் பார்வையாளர்களும் தங்களுக்கு பிடித்த வலைப்பூக்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

————————————————————————————–

எண்ணங்கள்

இது www.thoughtsintamil.blogspot.com என்ற தளத்தில் வரும் ஒரு தமிழ் வலைப்பூ. பத்ரி சேசாத்ரி என்ற சென்னைவாசி நடத்தும் இந்த வலைப்பூ எல்லா விடயங்களையும் பேசுகிறது. செய்திகள், தமிழ் மென்பதிவுகள், அனத்துத் துறைகள் மற்றும் வலைப்பதிவர்கள் என விரிந்து பரந்து எழுதப்படுகிறது. நேபாளம், மகாபாரதம், விடுதலைப்புலிகள் என அவியல் கலவை கிடைக்கிறது.

ஜெசிலாவின் கிறுக்கல்கள்

இது www.jazeela.blogspot.com என்ற வலைத்தளத்தில் உள்ளது. இந்த வலைப்பூ தமிழ் வலைப் பார்வையாளர்களிடையே கொஞ்சம் பேர் வாங்கியிருக்கிறது. ஜெசிலா துபாயில் வாழும் தமிழ் எழுத்தாளி. ஆனால் தன் அன்றாட அனுபங்களையே தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் டிவி பார்த்தது, கடைக்குப் போய் காய்கறி வாங்கி வந்தது….இப்படி போனாலும் இவற்றிடையே விமர்சனங்களும் பகுப்பாய்வுகளும் வருகின்றன. பார்வையிட வேண்டிய ஒரு தமிழ் வலைப்பூ.

கேன்சருடன் ஒரு யுத்தம்

இது அனுராதாவின் வலைப்பூ. www.anuratha.blogspot.com என்ற முகவரியில் கிடைக்கிறது. அவருடைய புற்று நோயுடன் கூடிய வாழ்க்கையை படம் பிடிக்கிறார். கொடிய புற்று நோயுடன் ஒரு பெண்ணாக இருந்து வாழ்வது எவ்வளவு இடையூறு மிகுந்த வாழ்க்கை என்பதை விட எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை என்றே நினைக்க வைக்கிறது. ‘பதினோறாவது முறையும் தோற்று விட்டோமே என்று கவலை கொள்ளதே, பத்து முறை விழுந்த போது எழுந்து நின்றதும் நீதானே’ என்ற லெனின் புகழ் பெற்ற வரிகளை அனுராதாவின் வாழ்க்கை நினைவூட்டுவதாக ஆனந்தவிகடன் புகழாரம் சூட்டியுள்ளது.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.