
வயதேறும் காலத்தின் களைப்பில்லை.
வராமல் போன பதவிகளைப் பற்றி கவலையில்லை.
வயதுப் பையனாய் இருந்த போது
வரிந்து கொண்ட தமிழர் கொள்கையில் மாற்றமில்லை.
தமிழ்நாடு மீண்டும் இறையாண்மை பெற
அவர் எண்ணாத நாளில்லை. ஏறாத படியில்லை.
தமிழர்க்கு எதிரே யார் நின்றாலும்
அவர் எதிர்க்காத களம் இல்லை. இல்லை.
அமையாது தமிழரசு என்ற அவநம்பிக்கை
அவரிடம் துளியும் இல்லை.
சமையாது தனியரசுக் கொள்கை என்று சாதிப்போர்
அவர்முன் வீரமுடன் நிற்பதில்லை.
வீழ்ச்சிகள் பல வந்தும் தமிழரசுக் கொள்கை
அவரிடம் வீழ வில்லை.
தாழ்ச்சியை பலர் அவருக்கு பரிசாகத் தந்தாலும்
தமிழர் மானம் அவர் நெஞ்சில் தாழ வில்லை.
புலிகளின் தலைவனுக்கு கைகொடுத்து நின்ற
புரட்சித் தலைவர் வை.கோ. – தமிழகத்தின்
போலித் தலைவர்களை வெளிச்சத்தில் காட்டிய
புதுமைத் தலைவர் வை.கோ.
ஈழப்போரில் அவர் என்றும் உடனிருந்ததனால்
இங்கேயே பல்லாண்டுகள் கம்பி எண்ணினார்.
கோழைகள் பலர் துரோகிளான போதும்
கோடிகளை புலிகளின் வழக்குகளுக்கே கொட்டினார்.
உலகெங்கும் நீதிமன்றச் சுவர்களிலெல்லாம்
தமிழ் தேசம், தமிழர் விடுதலை என்ற சொற்கள் எதிரொலிக்க
கலங்காமல் இவர் மோதி நின்ற – எதிரிகளை திணறடித்த
கணக்கற்ற வழக்குகள் காரணம்.
உயர் நீதிமன்றம் என்ன, உச்ச நீதிமன்றம் என்ன,
உலகத்துக்கொன்றாம் ஜெனீவாவிலுள்ள உலக நீதிமன்றமென்ன,
அயராது இவர் வந்து நின்றால் புலிகளங்கே சொல்லிடுவர்
அசையாத வெற்றி நமதே, அருந்தமிழர் மானம் வெல்லுமென.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்திட தமிழரின்
முதுகெலும்பை குறி வைத்து போர் தொடுத்து
தொல்லையில் இறங்கும் கேரளத்துக்கு
துணிவுடன் சவால் விடும் சங்கு முழக்கம் எங்கள் வை.கோ.
குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை
கொடுஞ்சாவுத் தண்டனைக்குள்ளாக்கிட
உற்ற வழியெல்லாம் இந்திய அரசு நாடியும்
உடைத்தார் சதிகளை, நம் உயிர்களைக் காத்தார் வை.கோ.
கூடங்குளத்திலும் கொந்தளிக்கும் மக்கள் கடல்
கொள்கை குன்று வை.கோ. வரவால் ஆர்ப்பரிக்கும்.
கூடாத காவலர்களால் பழங்குடிப் பெண்கள்
குதறப்பட்டபோதும் வை.கோ. குரல் நீதி கேட்கும்.
தலித் இனமக்கள் சாதிக் கொடுமையால்
தளரும் போதும் தோள் கொடுக்கும் வை.கோ.
தமிழினம் எங்கும் தலை குனியும் நிலையில்
தயங்காது நின்று வாள் எடுக்கும் வை.கோ.
தமிழ் ஈழ தேசமே குறி – அது
தனித் தமிழ் நாட்டை உருவாக்கும் பொறி
அமைப்போம் அதை உறுதியுடன் என
ஆர்ப்பரிக்கும் தமிழகம் அவர் பின்னே.
தடா, பொடா, தேசப் பாதுகாப்புச் சட்டம் என
தடைகள் ஒவ்வொன்றும் நாங்கள் ஏறும் படிகளாகும்.
விடாது தொடுப்போம் விடுதலைப் போரை என
விழாது முழங்கும் வை.கோ. பின்னே தமிழகம் அணியமாகும்.
Filed under: உலகத் தமிழர் களம் குறிச்சொற்கள்: | eelam,kudangulam,tamilnadu,tigers,tribal women raped in viluppuram,vaiko,viluppuram rape case




