தமிழர் இனம் வரலாறு தோறும் பல்வேறு அவமதிப்புக்களைச் சந்தித்தவண்ணம் தனது எதிரிகாலத்தை நிலைநிறுத்திக்கொள்ள சில இடங்களில் வளைந்தும், வளையாமலும் தனது தனித் தனித்தன்மையை காப்பாற்றி வரும் இனம். ஆனால் ஜூடாசை விட பெருந்துரோகிகள் தமது மானத்தை விட்டு துரோகமிழைத்து வரலாறு படைத்த- படைத்து வரும் இனமும் தமிழர் இனம்தான்.
விபீடணன் தொட்டு எட்டப்பன் வரையும், கருணாநிதி, கருணா வரையும் என்ன, அதற்கு மேலும் கே.பி., பிள்ளையான் என்று ஏராளமானோர்……… தமிழர் இனத்திற்கே சொந்தம் இந்த துரோகிகள் எல்லாம்.
இருந்தாலும் கடந்த ஆயிரமாண்டு கால வரலாற்றில் தமிழர் இனம் தேசியத் தலைவரைப் போல ஒருவரின் தலைமையைப் பெற்றதில்லை. தலைவரின் ஆளுமை இளம் உள்ளங்களை கடந்த இருபத்தந்தியைந்து ஆண்டுகள் மட்டுமின்றி இப்போதும் தட்டி எழுப்பக்கூடியதாகவே உள்ளது.
ஆனால் எதிரிப்படை என்பது சிங்களத்தோடு மட்டும் நிற்கக்கூடியதல்லவே! அது தமிழ் நாட்டிலும் தன் கால்களைப் பத்தித்துத்தானே வேலை செய்யும்? தமிழ், தமிழர், தமிழ் நாடு என்று சொல்லிக்கொண்டு தனது குடும்பம், தனது வணிகக்குழுமம், தனது சொந்தங்கள் என்று ஒட்டச்சுரண்டிக் கொள்ளையடிக்கும் துரோகி கருணாநிதியைப் போன்றவர்களும்…..ஈழத்தை எடுத்துக்கொண்டால் ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்ற துரோகிகளும் நிறைந்ததாக, எதிரிகளோடு சேர்த்து இவர்களை எதிர்கொள்வதாகவும் தமிழர்களது வாழ்க்கை இன்று அமைந்திருக்கிறது.
அன்று நமது எதிரி என்ன செய்தான்? நமது தலைவன் நரகாசுரனைக் கொண்று ஒழித்து விட்டு அதையே நாம் தீபாவளியாகக் கொண்டாடும்படி செய்தான். நம் தலைவன் ராவணனை அவனது உடன்பிறந்த தம்பி விபீடணனைத் துரோகியாக்கியதன் மூலம் கொன்றொழித்துவிட்டு ராவணனை அரக்கன் என்று கதை கட்டி விட்டு நம்மை நம்பச் சொல்ல வில்லையா நமது எதிரிகள்?
இதோ இன்று இன்றும் நம் தன்னிகற்ற தேசியத் தலைவரையும், இலட்சியத் தலைவர்களான திரு. வை.கோ., அய்யா நெடுமாறன் போன்றோரையும் ஒழித்துக்கட்ட எத்தனையோ துரோகிகளை இந்திய அரசும், ராஜபக்சே அரசும் திட்டமிட்டு தமிழர் இனத்திலிருந்து உருவாக்கிக் கொண்டுள்ளன. ஈழத்தில் துரோகிகளை உருவக்கி வளர்ப்பதும், தமிழ்நாட்டில் துரோகிகளை உருவாக்கி வளர்ப்பதும் ஒரு சிறிய வேறுபாட்டோடு செய்யப்படுகிறது. ஆம்….ஈழத்தில் துரோகிகளுக்கு அரசாங்கத்தில் நேரடியாக இடம் கொடுக்கப்படும். தமிழகத்தில் அவ்வாறன்ற்றி விடுதலையை முன்வைத்து போராடுபவர்கள் போலவும், அரசை எதிர்த்து பேசுவோர் போலவும் வேடமேற்றப்பட்டு துரோகிகள் தூக்கி நிறுத்தப்படுவார்கள்.
இதோ அப்படியொரு துரோகி நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு தனது துரோகத்தனத்தை கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறான். ஈகையாளன் முத்துக்குமார் இறந்தவேளை அவரது இறுதி ஊர்வலத்தை திசைதிருப்பி மாணவர்களின் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த மீசைத்துரோகியிடம்தான் ஒப்படைத்திருந்தார் கருணாநிதி என்ற உண்மை இன்று வெளிவந்து விட்டது. அதன்பின் மீசைத்துரோகி ராஜபக்சேயுடன் கூடிக்குலவுவது போன்ற செய்திகள் படங்களுடன் வெளியாகி வரலாற்றில் பதிவாகி வருகின்றன.
செம்மொழி மாநாடு என்று சொல்லப்பட்டதில் இந்த துரோகி கருணாநிதியின் முன் தான் பெரிய ஈழ மக்களின் நண்பன் போல நடித்து முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்தான். அவர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை அங்கு விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றான். அதன் பொருள் வேறொன்றுமல்ல, நமது கம்பெனிகளை விரைந்து அங்கே நிறுவ ராஜபக்சே அனுமதி தரவேண்டுமென்பதே. இதை மறைமுகமாக இந்திய, இலங்கை அரசுக்கு உணர்த்துவதர்காகவே இந்தத் துரோகியை அவ்வாறு பேச வைத்ததாகவும் சொல்லப்பட்டது.
இன்று இதே துரோகிதான், ஒரு பக்கம் தலித் தேசியம் என்றும் இன்னொரு பக்கம் தமிழ் தேசியம் என்றும் டபுள் நாடகமாடும் இதே திருமாதான் வரும் அக்டோபர் மாதம் ‘தமிழர் இறையாண்மை மாநாடு’ சென்னையில் நடத்தப்போவதாக பட்டிதொட்டி தோறும் வாகனங்கள் மூலம் பரப்புரை செய்யப்படுகிறது. ‘தமிழர் இறையாண்மை மாநாடு’……! நடத்தப்போவதோ உலக அளவில் தமிழர் துரோகி என அறியப்பட்டிருக்கும் திருமாவளவன்.
இந்த அறிவிப்பை ஏதோ தற்ச்செயல் நிகழ்ச்சி எனவோ, திருமாவின் அளப்பரிய தமிழினப்பற்றின் காரணமாக இவ்வாறு மாநாடு நடத்தப்பட இருக்கிறது என்றோ நினைத்துவிட முடியவில்லை. இன்றைய சூழ்நிலையில் தமிழர் இனத்தின் விடுதலை முயற்சிகளை வேரறுப்பதற்காக ஒன்றல்ல, இரண்டு அரசுகள் களத்தில் காலூன்றி நின்று செயல்படுகின்றன. ஒன்று இந்திய அரசு. மற்றொன்று இலங்கை அரசு. இந்த இரண்டு அரசுகளின் ஏவலாட்களாக இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர் இனத்திற்குள்ளிருந்தே துரோகிகளை உருவாக்குவதும், பயிற்ச்சியளிப்பதும், அரசியலில் களமிறக்குவதுமென ஒரு பெரிய பாடத்திட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கே.பி.க்கு இன்னமும் பயிற்ச்சி முடியவில்லை. தமிழர்களுக்கெதிரான துரோகத்தை செயல்படுத்துவது பற்றிய ஒறாண்டு டிப்ளமா படிப்பைத்தான் கே.பி. முடித்திருக்கிறார். இன்னமும் சிலமாதங்கள் போனால்தான் அவர் துரோகக் கலையின் முழுமையான பட்டம் பெற்ற பின்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். கே.பி.க்கு ஆராய்ச்சி வழிகாட்டிப் பேராசியராக கோத்தபய விளங்கிக்கொண்டிருக்கிறான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தப்பயிற்ச்சிக்கு பலரைத்தேர்ந்தெடுத்திருந்தாலும் அதிக அனுபவமுடைய திருமாதான் முதல் ரேங்க் மாணவர் என்பதில் அய்யமில்லை. இவரது ஆராய்ச்சி வழிகாட்டிப் பேராசிரியர் துரோகமென்ன்னும் கடலில் பெருங்கப்பல்கள் செலுத்தி அரசியல் நடாத்தி புகழ்பெற்ற் கருணாநிதி என்றால் கேட்கவா வேண்டும்?
திருமா துரோகப்பயிற்சியில் நன்கு அனுபவமிக்கவர் என்பதை 2004 நாடளுமன்ற தேர்தல் காட்டியது. தலித் வாக்கு வங்கி அப்போது அமோகமாக இவர்பக்கம் இருந்தது. தேர்தல் பேரம் பேசுவதற்காக வட இந்திய தரகு அதிகார வர்க்கக் கட்சித்தலைவர்களைப் போய் பார்த்து பேச்சுவார்த்தை நடத்திய திருமா அவர்களுக்கு தனது வாக்குவங்கியை விட்டுத் தருவதற்காக ஏறத்தாழ ரூ. 500 கோடி பெற்றுக்கொண்டதாக அப்போதே சொல்லப்பட்டது.
இப்போது ராஜபக்சேவுடன் இணக்கம் காண்பது, கருணாநிதியின் நோக்கமான வளர்ச்சித்திட்டங்களை தங்கள் மேற்பார்வையில் ஈழத்தில் செயல்படுத்துவது போன்றவற்றின் மூலம் மேலும் ஒரு 500 கோடி உருபாயை சம்பாதிக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறாரோ என்னவோ. இதை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய தேவை இருக்கிறது. இன்று தமிழர் இறையாண்மை என்றால் எதை முன்வைத்து அவ்வாறு சொலிகிறார் திருமாவளவன்? தமிழ்நாட்டுத் தமிழரின் இறையாண்மையை திருமா போன்ற அரசியல் வேடதாரியால் முன்வைத்துப் போராட முடியாது. ஈழத்தின் இறையாண்மையை முன்வைத்து இவர் நடாத்திய போராட்டங்கள் யாவும் கருணாநிதியாலும் காங்கிரசுக் கூட்டத்தாலும் தன்வசப்படுத்தப்பட்டுவிட்டன. அதன்பின் தமிழர் இறையாண்மை என்றால் யாருடைய இறையாண்மை?
அதுமட்டுமல்ல, தமிழரின் இறையாண்மை என்பது இரண்டு அரசுகளுக்கு கெட்டகனவை ஏற்படுத்தும் ஒரு விடயம். இன்று ஈழத்தின் இறையாண்மையை துடைத்தெறிய இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவதன் காரணமே நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இறயாண்மையைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான். அதுபோல் தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் தனக்கு எந்த தொந்திரவும் இருக்கக்கூடாது என்பதால்தான் இலங்கை அரசும் தமிழர் இறையாண்மையை துடைத்தெறிய எல்ல வழிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறது.
அப்படி இருக்கையில் ஈழத்தின் பிரச்சினையைத் தொடாமல் ஒரு தமிழர் இறையாண்மை என்று எங்கேயாவது பேச முடியுமா? திருமவால் அவ்வாறு பேச முடியுமா? கடந்த ஆண்டு இவர் நடாத்திய ‘எழும் தமிழீழம்’ மாநாட்டிற்கே ஈழம் என்ற பெயரையும், தலைவர் பிரபாகரன் படத்தையும் அழித்து விட்டுத்தான் தமிழகக் காவல்துறை அனுமதி வழங்கியது. கருணாநிதியின் அனுமதியின்றி ‘எழும் தமிழ் ஈழம்’ அறிவிக்கப்பட்டிருக்க முடியாது. பின்பு கருணாநிதியே காவல்துறைக்கு ஆணை பிறப்பித்து ஈழம் என்ற சொல்லையும், தலைவர் படத்தையும் அழிக்கச் செய்தபோது திருமா மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு அழகு பார்த்துக் கொண்டு திரிந்தவர்தான்! அதன்பின் கருணாநிதியின் விருப்பத்திற்கிணங்க இலங்கை சென்ற தூதுக்குழுவில் இடம்பெற்று ராஜபக்சேயிடம் குட்டு பட்டது. பின்னர் ராஜபக்சேவுடன் இன்முகத்துடன் கைகுலுக்கி தன் குட்டை உடைத்துக் கொண்டது. ஆகா மீசையின் வீரம்தான் எத்தகையதக உள்ளது?
இன்று ஒரு உண்மையான இறையாண்மை மாநாடு திருமா நடத்திவிடுவார் என்றால் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களா இந்திய மற்றும் இலங்கை ஆட்சியாளர்கள்? தமிழர்க்கென இறையாண்மை மாநாடு திருமா நடத்தினால் கருணாநிதிக்கே அது பிடிக்காதே!அப்படி இருக்கையில் எப்படி ஒரு உண்மையான இறையாண்மை மாநாட்டை இவர் நடத்த முடியும்?
இன்று இவர் தமிழர் இறையாண்மை நடத்தப் போகிறார் என்றால் பழையகாலத்து பழமொழி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது: ‘யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வையுங்க…’. (யோக்கியர் தெருவில் நுழைந்தால் வீட்டுவாசலில் இருக்கும் சொம்பை எடுத்து உள்ளே வைக்கச் சொல்வார்களாம். அதாவது யோக்கியர் உண்மையிலேயே யோக்கியர் இல்லை, திருடன் என்பது அதன் பொருள்). இன்று கபடவேடதாரி, ஈழ நாடகக்காரன் திருமா ‘தமிழர் இறையாண்மை மாநாடு’ என்று அறிவித்தவுடன் அதே பழமொழி நினைவுக்கு வருவது மிகப்பொருத்தமல்லவா?
ஆம், ஏனென்றால் இன்று உலகம் முழுதும் உலகத்தமிழர்களின் போராட்டங்கள் தமிழர் இறையாண்மையை உலக நாடுகளுக்கு உணர்த்தி வருவது கண்கூடு. அதை எப்பாடு பட்டேனும் தகர்த்துவிட இந்திய, இலங்கை அரசுகள் துடிப்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்காக ஐந்தாம் படையை (துரோகிகள் படையை) இரண்டு அரசுகளும் திட்டமிட்டு உருவாக்கி வருவதும், இலங்கையில் அவர்களுக்கு நேரடியாக அரசில் பங்களித்து உயர்த்தி விடுவதும், இந்தியாவைப் பொருத்தவரை மறைமுக ஆதாயங்கள், சில அற்பப் பதவிகள், சில நூறு கோடி ரூபாய்கள் போன்றன மூலம் துரோகிகளை உருவாக்கி வருவதும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. .
திருமாவின் வாயும் கையும் தூய்மையாக இல்லை என்பதை அவரது கடந்த கால செயல்கள் காட்டுகின்றன. இந்நிலையில் உலகத்தமிழர்களின் மூலம் போராட்டங்களின் வீறு கொண்டெழுந்துகொண்டிருக்கும் தமிழர் இறையாண்மை பற்றிய கருத்தோட்டத்தை நசுக்குவதற்காக ஒரு டம்மி தமிழர் இறையாண்மை மாநாடு திருமாவால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இருக்கிறது என்பது தர்க்கப்பொருத்தம் உள்ளதாகப்படுகிறது அல்லவா?
ஆம்….உலகத்தமிழர்களே, எதற்கும் மறந்து விடாதீர்கள்! ‘யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வையுங்க…’!
————————-
நிலவரசு கண்ணன்
Filed under: உலகத் தமிழர் களம் குறிச்சொற்கள்: | Liberation,ltte,pirabakaran,tamils sovereingty,thiruma





சாட்டையடி. இது போன்ற சாட்டையடி திருமா போன்ற துரோகிகளுக்கு வலிக்காது. உண்மையில் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்படவேண்டிய குற்றவாளிகள் இந்த துரோகியைப் போன்றோர்தான்.